Posts

திராவிடர்கள் Vs தமிழர்கள்

Image
திராவிடர்கள் Vs தமிழர்கள்                                                                                                        ‘திராவிடர்கள் Vs தமிழர்கள்' என்ற தலைப்பில் ஓர் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், காலம் அந்த சூழலில் என்னை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம் ‘தமிழ் தன்னைத் தானே மீட்டெடுக்கும்’ என்பதாக நான் நினைக்கிறேன். இதற்கு தமிழ் அறிஞர்கள் உந்து சக்தியாக எப்போதும் இருப்பர்.  ‘தமிழ் இனி மெல்ல சாகும்’ என்பது எந்த அளவிற்கு உண்மையோ... அதேப் போன்று, ‘தமிழ் இனி மெல்ல வாழும்’ என்பதும் உண்மையே. ஏனெனில், உலக இயக்கமே ஓர் சுழ்ச்சி தான். ஒரு காலத்தில் இலை, தழைகளை ஆடையாக அணிவது பழங்குடியின பழக்கமாக கருதப்பட்டது. ஆனால், இன்று, மேற்கத்திய நாடுகளில் இலை, ...

தத்துவ அறிஞர்களின் பார்வையில் வைரவன் குப்பத்தின் பண்பாடு ஊடாட்டம்

Image
தத்துவ அறிஞர்களின் பார்வையில் வைரவன் குப்பத்தின் பண்பாடு ஊடாட்டம் அறிமுகம் : சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு பகுதியானது நெய்தல் திணை கொண்ட நிலப்பரப்பு. ஒவ்வொரு இடத்திற்கும் ஓர் வாழ்வியல் சூழல் இருப்பதுபோன்று, கடல் சார்ந்த இப்பகுதியில் மீனவர்களின் வாழ்க்கைச் சூழல்  கடலுடன் இயைந்து காணப்படுகிறது. ஆனால், ஐந்திணைகளில் எதுவாக இருந்தாலும், உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்களால், பல பண்பாடு  மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இதனை, ஒரீரு நாட்களை அடிப்படையாக கொண்டு வாழ்வியல் மாற்றங்களை விளக்க முடியாது. ஆனால், நெய்தல் குடிகள் வாழ்வில்  ஓர் குறிப்பிட்ட கால அளவில்  ஏற்பட்டுள்ள பண்பாடு ஊடாட்டங்களை எளிதாக காணலாம்.  அந்த வகையில், வைரவன் குப்பத்தின் வெளிசார் வாழ்வியலில் பல மாற்றங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, வழிபாட்டு தளம், ஒப்பனைத் தன்மை, மரபு சார்   அழகியல் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள ஊடாட்ட பண்புகளை எளிதாக காணலாம். இதனை, ஆய்வுப் பார்வையில் தற்போது காணலாம். கோட்பாடு :  ...

டெல்லி போராட்டச் செய்திகள்: பாமர மக்களுக்கு சில டிப்ஸ்...

Image
டெல்லி போராட்டச் செய்திகள்: பாமர மக்களுக்கு சில டிப்ஸ்... சமூகத்தில் அசம்பாவிதங்கள் நிகழும்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த போலிச் செய்திகள் விஷமத்தனமாக பரப்பப்படும். டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நியாயமான முறையில் நடந்தாலும் அதனை கலவரமாக மாற்றி, தங்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் அதிகளவில் நடைபெறும். குறிப்பாக, ஊடகங்கள் மூலம் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகள் வெகுவாக பரப்பப்படும். பாமர மக்கள் அதனை எளிதாக ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, செய்தியை வாசிக்கும்போது சற்று நிதானமாக, கலப்படச் செய்தியில் இருந்து தூயச் செய்தியை பிரித்தெடுக்க பாமர மக்கள் அறிவது அவசியம். ஆதலால், செய்திகளை வாசிக்கும்போது கீழே காணும் சில முக்கிய அம்சங்களை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும். உண்மைச் செய்திகளை கண்டறிவதற்கான சில டிப்ஸ் இதோ... * செய்தியின் தலைப்பை மட்டும் வைத்து செய்தியின் சாரம்சம் இதுதான் என்று முடிவுக்கு வரக் கூடாது. செய்தியை முழுவதுமாக படித்து அதன்பின் சிந்திக்க வேண்டும். *  “இது குறித்து கூட்டத்த...

தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு பார்வையில் ராஜீவ் கொலை வழக்கு

Image
தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு பார்வையில் ராஜீவ் கொலை வழக்கு இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை குறித்த கட்டுரைகளை படிப்பதன் மூலம், அதனை, அதன் வழியிலேயே அணுக முடியும். நமது சிந்தனைக்கு கொண்டு சென்று, கிளறி விட்டால் மட்டுமே மேற்கொண்டு, அதில் பயணிக்க முடியும். அதனையொட்டி, ராஜீவ் கொலை வழக்கு குறித்த பன்முகப் பார்வையை மக்களிடம் கொண்டு வரும் வழியாக, அவர்களின் சிந்தனைகளை ஆய்வு ரீதியாக கொண்டு, ராஜீவ் கொலையில் சிக்கிய ஏழு தமிழர்களின் நிலையை உணரச் செய்து, ராஜீவ் கொலையின் உண்மைக் நிலையை வெளிக்கொணரும் அடுத்தக் கட்ட நகர்வாக, மேலை நாட்டு தத்துவ அறிஞர்களின் பார்வையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இதற்காக,   ஏகல், அடர்னோ, சீசக், கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் கருத்தாக்க, கோட்பாட்டு பார்வைகளை, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரில் ஒருவரான  “ இரவிச்சந்திரன் எழுதி, எழுத்தாளர்  பா. ஏகலைவன் தொகுத்த,  ராஜீவ் காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்  ”   என்னும் புத்தகம் ஆய்வுத் தளமாக கொண்டு அணுகப்படுகிறது.  ஜெர்மன் தத்துவவியல் அறிஞர் ஏகலின் (Geo...

மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்…

Image
மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்… தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பது நிகழ்ச்சிகளின் இடைவெளியில் ஒளிபரப்புவது என்ற நிலையில் இருந்து, விளம்பரங்களின் இடையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்ற நிலைக்கு பெரும்பாலும் மாறியுள்ளது. இதில், விளம்பரங்களின் உண்மைத் தன்மை என்ன என்று அறிந்து பொருட்களை வாங்கும் நிலையில் இருந்து, எந்த விளம்பரம் மனதை கவர்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பொருட்களை வாங்கும் மன நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராப்பிக்ஸ் துணைக் கொண்டு பல மாய வித்தைகள் செய்து வியாபாரம் செய்கின்றனர். இதில், அழகு பொருட்கள் சார்ந்த விளம்பரங்களுக்கு வெள்ளை நிற பெண்களையும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்க பல மாய தோற்றத்தையும் உருவாக்கி வருகிறார்கள், குறிப்பாக, இளைய தலைமுறையின் வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வீட்டில் இருந்தே பொருட்களை பெறுவது என்ற பிம்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள்,  ஹமம் சோப் பயன்படுத்துவதன் மூலம் பெண் பிள்ளைகள் சமூகத்தில் அச்சமின்றி நடந்து செல்லலாம், ஹார்லிக்ஸ் குடித்தால் மூளையை வளர செய்து அனைவரையும்...

ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ?

Image
ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ? மனித உடலில் இருந்து இரத்தத்தை பிரித்தெடுத்தால் என்ன நிலை ஆகுமோ ? அதே நிலையை ரசிகரின் மனதில் இருந்து அவரது ரசிப்பை பிரித்தெடுத்தால் ஆகும். அந்த அளவிற்கு மனிதருக்கும்,  அவரது ரசிப்புக்கும் இடையே மரபு நேசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆடல், பாடல் இல்லாத ஓர் நிலை உருவானால், இயந்திரத் தனமான சமகாலத்தில், ஒருவர் மற்றொருவரை கொலை செய்யும் அளவிற்கான மன அழுத்தம் உருவாகக் கூடும். மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் மட்டுமல்ல, ஆடல், பாடல் இல்லாத நிலத்திலும் உருவாகும் என அறிஞர்களால் எச்சரிக்கை விடக் கூடும். தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆடலும், பாடலும் இன்றி ஓர் அணுவும் அசையாது. ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஆடல், பாடல் ஒன்றோடொன்று கலந்துள்ளது. அதிலும், தமிழ் இசைக் கருவிகள் வாழ்வியலோடு தொடர்புடையதாக இருப்பதால் அதற்கான அசைவுகளும் தன்னகத்தே கொண்டு, நடனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், தனக்காக வாழ்பவர்களை, தனக்காக தியாகம் செய்பவர்களை, மனதிற்கு மகிழ்ச்சியை தந்து, துன்பம் நீக்குபவர்களை கடவுளாக ப...