தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு பார்வையில் ராஜீவ் கொலை வழக்கு
தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு பார்வையில் ராஜீவ் கொலை வழக்கு இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை குறித்த கட்டுரைகளை படிப்பதன் மூலம், அதனை, அதன் வழியிலேயே அணுக முடியும். நமது சிந்தனைக்கு கொண்டு சென்று, கிளறி விட்டால் மட்டுமே மேற்கொண்டு, அதில் பயணிக்க முடியும். அதனையொட்டி, ராஜீவ் கொலை வழக்கு குறித்த பன்முகப் பார்வையை மக்களிடம் கொண்டு வரும் வழியாக, அவர்களின் சிந்தனைகளை ஆய்வு ரீதியாக கொண்டு, ராஜீவ் கொலையில் சிக்கிய ஏழு தமிழர்களின் நிலையை உணரச் செய்து, ராஜீவ் கொலையின் உண்மைக் நிலையை வெளிக்கொணரும் அடுத்தக் கட்ட நகர்வாக, மேலை நாட்டு தத்துவ அறிஞர்களின் பார்வையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இதற்காக, ஏகல், அடர்னோ, சீசக், கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் கருத்தாக்க, கோட்பாட்டு பார்வைகளை, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரில் ஒருவரான “ இரவிச்சந்திரன் எழுதி, எழுத்தாளர் பா. ஏகலைவன் தொகுத்த, ராஜீவ் காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட் ” என்னும் புத்தகம் ஆய்வுத் தளமாக கொண்டு அணுகப்படுகிறது. ஜெர்மன் தத்துவவியல் அறிஞர் ஏகலின் (Geo...