Posts

Showing posts with the label Rhizome

ஈ.வே.ரா “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்

Image
ஈ.வே.ரா “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ் தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன். இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை ஓர் தளமாக கொண்டுள்ளேன். * ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதார கூறுகளை புரிந்துக் கொள்ள முடியும். 1)ஈ.வே.ரா அவர்களின் "வெங்காயம்" கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்? ஈவேரா அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ் சமூகம் எதனை பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம காலத்தில் பேசுகின்றத...