Posts

Showing posts from January, 2019

மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்…

Image
மக்களை அடிமைப்படுத்தும் போலி விளம்பரங்கள் : உஷார்…உஷார்… தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பது நிகழ்ச்சிகளின் இடைவெளியில் ஒளிபரப்புவது என்ற நிலையில் இருந்து, விளம்பரங்களின் இடையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்ற நிலைக்கு பெரும்பாலும் மாறியுள்ளது. இதில், விளம்பரங்களின் உண்மைத் தன்மை என்ன என்று அறிந்து பொருட்களை வாங்கும் நிலையில் இருந்து, எந்த விளம்பரம் மனதை கவர்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பொருட்களை வாங்கும் மன நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராப்பிக்ஸ் துணைக் கொண்டு பல மாய வித்தைகள் செய்து வியாபாரம் செய்கின்றனர். இதில், அழகு பொருட்கள் சார்ந்த விளம்பரங்களுக்கு வெள்ளை நிற பெண்களையும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்க பல மாய தோற்றத்தையும் உருவாக்கி வருகிறார்கள், குறிப்பாக, இளைய தலைமுறையின் வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வீட்டில் இருந்தே பொருட்களை பெறுவது என்ற பிம்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள்,  ஹமம் சோப் பயன்படுத்துவதன் மூலம் பெண் பிள்ளைகள் சமூகத்தில் அச்சமின்றி நடந்து செல்லலாம், ஹார்லிக்ஸ் குடித்தால் மூளையை வளர செய்து அனைவரையும்...

ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ?

Image
ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ? மனித உடலில் இருந்து இரத்தத்தை பிரித்தெடுத்தால் என்ன நிலை ஆகுமோ ? அதே நிலையை ரசிகரின் மனதில் இருந்து அவரது ரசிப்பை பிரித்தெடுத்தால் ஆகும். அந்த அளவிற்கு மனிதருக்கும்,  அவரது ரசிப்புக்கும் இடையே மரபு நேசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆடல், பாடல் இல்லாத ஓர் நிலை உருவானால், இயந்திரத் தனமான சமகாலத்தில், ஒருவர் மற்றொருவரை கொலை செய்யும் அளவிற்கான மன அழுத்தம் உருவாகக் கூடும். மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் மட்டுமல்ல, ஆடல், பாடல் இல்லாத நிலத்திலும் உருவாகும் என அறிஞர்களால் எச்சரிக்கை விடக் கூடும். தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆடலும், பாடலும் இன்றி ஓர் அணுவும் அசையாது. ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஆடல், பாடல் ஒன்றோடொன்று கலந்துள்ளது. அதிலும், தமிழ் இசைக் கருவிகள் வாழ்வியலோடு தொடர்புடையதாக இருப்பதால் அதற்கான அசைவுகளும் தன்னகத்தே கொண்டு, நடனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், தனக்காக வாழ்பவர்களை, தனக்காக தியாகம் செய்பவர்களை, மனதிற்கு மகிழ்ச்சியை தந்து, துன்பம் நீக்குபவர்களை கடவுளாக ப...