Posts

ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?

Image
                                 ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ? உலக அரசியல் வரலாற்றில் அவ்வப்போது கண்ணுக்கு தெரிந்தே சில அயோக்கியத்தனங்கள் அரங்கேறுவது வழக்கம். அதில், இந்தியாவை பொறுத்தவரையில் நடப்பு நூற்றாண்டில்  அதிக அளவில் அரசியல்  அயோக்கியத்தனங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் சட்டத்திற்கு புறம்பாக செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் சுடப்பட்டு இருப்பர். ஆனால், செம்மரம் வெட்டச் சொல்லிய நபரின் பெயர் கூட வெளியே வராது,  மூன்று மாநில எல்லையில் சந்தன மரங்களை வெட்டியதற்காக, யானை தந்தங்களை விற்பனை செய்ததற்காக காட்டில் இருந்த வீரப்பன் கொடுரமாக கொலை செய்யப்படுவர். ஆனால், சந்தன மரங்களை, யானை தந்தங்களை  வாங்கியவர்கள் நகரத்தில் இருந்தாலும், அவர்கள் மீது சிறு தூசியும் படிந்து இருக்காது. இதற்கு, இந்திய அரசாங்கமும், சட்டங்களும், ஏவல் துறையும் தெரிந்தே உடந்தையாக இருக்கும்.  இதற்கு முத்தாய்ப்பாக விளங்குவது 7  தமிழர்களின் சிறை வாசம். ஒரு நாட்டின் பிரதமரை வெடிக...

ஈ.வே.ரா “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்

Image
ஈ.வே.ரா “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ் தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன். இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை ஓர் தளமாக கொண்டுள்ளேன். * ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதார கூறுகளை புரிந்துக் கொள்ள முடியும். 1)ஈ.வே.ரா அவர்களின் "வெங்காயம்" கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்? ஈவேரா அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ் சமூகம் எதனை பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம காலத்தில் பேசுகின்றத...

சர்வதேச கருத்தரங்கு vs கோயில் திருவிழா

Image
சர்வதேச கருத்தரங்கு vs கோயில் திருவிழா                  (International conference Vs temple festival ) அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், உள்நாட்டிலும் சர்வதேச கருத்தரங்குகள், ஆய்வு கட்டுரைகள் சமர்பித்தல் போன்றவை பெரிய நிகழ்வாக நடைபெறும். உலக அளவில் சிறந்த கல்வியாளர்கள் தங்களின் ஆய்வு படைப்புகளை கருத்தரங்கில் சமர்பிக்கும்போது, அவர்களின் ஆய்வு பார்வைகள் மற்ற கல்வியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய பரிமாணத்தை உருவாக்கும். கருத்தரங்கு நடக்கும் இடம் அதற்கான சிறந்த தளமாக அமையும். அதனால், சர்வதேச கருத்தரங்கு நடத்த பல முன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். இதேபோன்று, கோயில் திருவிழாவும் நாட்டார் கலைகளில் சிறந்தவர்கள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தி ஊரே ஒன்று கூடி, பல நேச உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ளும் படிப்பினைகளை வழங்கும். அதற்கான பரிமாணங்கள் பல வடிவங்களில் வெளிப்படும். கோயில் திருவிழாவை நடத்தவும் பல முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். சர்வதேச ஆய்வு கர...